ஏர் இந்தியா ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிய தடை


ஏர் இந்தியா ஊழியர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிய தடை
x
தினத்தந்தி 27 Aug 2020 2:28 PM GMT (Updated: 27 Aug 2020 2:28 PM GMT)

தனது நிறுவன பணியாளர்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணிய தடை விதிக்கப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

 பணிப்பகுதிகளில் சுகாதாரமற்ற உடைகளை உடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தில் அலுவலகங்களில் டீ சர்ட் மற்றும் ஜீன்ஸ் போன்ற உடைகளை உடுத்தக் கூடாது என தெரிவித்துள்ள ஏர் இந்தியா கிழிந்த மற்றும் கண்ணியக்குறைவான உடைகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

துணிகள் நன்கு சலவை செய்யப்பட்டதாகவும், சுத்தமானதாகவும் இருக்க வேண்டும்  எனவும் ஏர் இந்தியா வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அனைத்து ஊழியர்களும் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் எனவும் விதிகளை மீறினால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஏர் இந்தியா  தெரிவித்துள்ளது.

Next Story