கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் -காங்கிரஸ் மூத்த தலைவர்


கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் -காங்கிரஸ் மூத்த தலைவர்
x
தினத்தந்தி 29 Aug 2020 6:06 AM GMT (Updated: 29 Aug 2020 6:06 AM GMT)

கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால் அடுத்த 50 ஆண்டுகளுக்கு கட்சி எதிர்கட்சி வரிசையில் தான் அமரும் என மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்ததால், சோனியா காந்தி இடைக் கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்று கடந்த 10-ந் தேதியுடன் ஓராண்டு ஆகிறது.

சோனியா காந்தியே தலைவராக இருக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு பிரிவினர் கூறி வரும் நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பலர் சமீப காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், காங்கிரசுக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய, கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய முழுநேர தலைமை தேவை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கோரி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 23 பேர் சமீபத்தில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். இந்த கடிதத்தில் குலாம்நபி ஆசாத், கபில் சிபல், மணிஷ் திவாரி, ஆனந்த் சர்மா, மிலிந்த் தியோரா மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திட்டு இருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 23 காங்கிரஸ் தலைவர்கள் இடைக்கால கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கடிதம், சீர்திருத்தங்கள், நியாயமான உள் தேர்தல்கள், கூட்டு முடிவெடுப்பது மற்றும் "முழுநேர, புலப்படும் தலைமை" என்று அழைப்பு விடுத்து இருந்தது.

 "அதிருப்தி" கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-

காங்கிரஸ் செயற்குழு (சி.டபிள்யூ.சி) மற்றும் முக்கிய அமைப்பு பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படாவிட்டால்.
கட்சி "வரலாற்றுக் பிழை செய்வதாகவும் "அடுத்த 50 ஆண்டுகளுக்கு" தொடர்ந்து எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:-

"கடந்த பல தசாப்தங்களாக, கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகள் எங்களிடம் இல்லை. ஒருவேளை 10-15 ஆண்டுகளுக்கு முன்பே நாம் அதற்கு முன்வந்திருக்க வேண்டும். இப்போது நாம் தேர்தல்களில் தோல்வியடைகிறோம், நாம் திரும்பி வர வேண்டுமானால் கட்சி தேர்தலை நடத்துவதன் மூலம் நம்மை பலப்படுத்த வேண்டும் என கூறினார்.


Next Story