தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்: ராணுவ மருத்துவமனை + "||" + Former President Pranab Mukherjee (in file pic) is being treated for lung infection.

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்: ராணுவ மருத்துவமனை

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் சிறிது முன்னேற்றம்: ராணுவ மருத்துவமனை
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84). கடந்த 9-ந்தேதி தனது வீட்டு குளியலறையில் தவறி விழுந்தார். எனவே அவர் மறுநாள் டெல்லி ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில், அவரது மூளையில் ரத்தம் உறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே டாக்டர்கள் 5 மணி நேரம் ஆபரேஷன் செய்து அதை அகற்றினர். ஆனால் ஆபரேஷனுக்குப் பிறகு பிரணாப்பின் உடல்நிலை மோசமடைந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆழ்ந்த கோமா நிலையில் உள்ள அவரது உடல் நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் பிரணாப் முகர்ஜியின் சிறுநீரக செயல்பாட்டில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆழ்ந்த கோமா நிலையில் இருக்கும் அவர் தொடர்ந்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. 


தொடர்புடைய செய்திகள்

1. பிரணாப் முகர்ஜிக்கு ராசியாக அமைந்த 13-ம் எண்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 13-ம் எண் ராசியானதாக அமைந்துள்ளது.
2. பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வங்காளதேசத்தில் துக்கம் அனுசரிப்பு - டிரம்ப், ராஜபக்சே இரங்கல்
பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வங்காளதேசத்தில் நேற்று துக்கம் அனுசரிக்கப்பட்டது. டிரம்ப், ராஜபக்சே ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
3. பிரணாப் முகர்ஜி மறைவு: அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
4. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
5. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை 4.30 மணியளவில் காலமானார்.