இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை கடந்தது


இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை கடந்தது
x
தினத்தந்தி 29 Aug 2020 8:56 AM GMT (Updated: 29 Aug 2020 8:56 AM GMT)

இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இன்று வரை 4 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 609 ஆக உள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசின் பாதிப்புக்கு அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.  இதனை தொடர்ந்து 3வது இடத்தில் உள்ள இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 76,742 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 34,63,973 ஆக உள்ளது.

இதுவரை 7,52,424 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 26,48,999 பேர் குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா பாதிப்புகளால் 1,021 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.  இதனால், தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62,550 ஆக உயர்ந்து உள்ளது.

நாட்டில் இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து வருகிறது.  இதேபோன்று கொரோனா பரிசோதனை எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருகிறது.  இதன்படி, இன்று வரை நாட்டில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 609 ஆக உள்ளது என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.  இதனால் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையானது 4 கோடி என்ற அளவை கடந்துள்ளது.

Next Story