தேசிய செய்திகள்

அதிகமாக சாப்பிட்டதால் ஆத்திரம்: பேரனை தினமும் அடித்து கொடுமைப்படுத்திய பாட்டி + "||" + Grandmother beat and bullied her grandson daily

அதிகமாக சாப்பிட்டதால் ஆத்திரம்: பேரனை தினமும் அடித்து கொடுமைப்படுத்திய பாட்டி

அதிகமாக சாப்பிட்டதால் ஆத்திரம்: பேரனை தினமும் அடித்து கொடுமைப்படுத்திய பாட்டி
பெங்களூருவில் சொந்த பேரனையே சூடு வைத்து கொடுமைப்படுத்திய பாட்டி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,

கர்நாடக மாநிலம்  பெங்களூரு  நகரில் பிடிஎம் லேஅவுட்  பகுதியை சேர்ந்த இம்ரான் பாஷா- ஆதிரா தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் உள்ள நிலையில், அவர்களுடைய நான்காவது மகன் அர்மானுக்கு அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் இருந்துள்ளது.


இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிராவின் அம்மா முபினா தினமும், அர்மானை சூடு வைத்தும், அடித்து கொடுமை படுத்தியும் வந்துள்ளார். அதனை ஆதிராவின் தங்கை பாத்திமா வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில்  பரப்பி வந்துள்ளார்.  இந்த வீடியோக்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில்,  நேற்று இரவு ஆதிரா வீட்டு முன்பு  ஏராளமானோர்  கூடி குழந்தையை ஏன் துன்புறுத்துகிறீர்கள் இன்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், அர்மானின் பாட்டி முபினாவையும், சித்தி பாத்திமாவையும் கைது செய்தனர்.  பின்னர் காவல்துறையால் மீட்கப்பட்ட அர்மான் தற்பொழுது பன்னார்கட்டா சாலையிலுள்ள ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...