தேசிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் தகவல் + "||" + Former President Pranab Mukherjee's health improves - Doctors informed

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் தகவல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் - மருத்துவர்கள் தகவல்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி (வயது 84) டெல்லியில் உள்ள ஆர்.ஆர்.ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு மூளையில் இருந்த ரத்த கட்டி ஆபரேஷன் மூலம் அகற்றப்பட்டது. மேலும் கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. நுரையீரலில் தொற்று இருப்பதால் அதற்காகவும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.


கோமா நிலையில் இருக்கும் பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதயத்தின் செயல்பாடு சீராக இருப்பதாகவும், சிறுநீரகத்தின் செயல்பாடு மேம்பட்டு உள்ளதாகவும், இதனால் உடல் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளது - ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை - ராணுவ மருத்துவமனை
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ராணுவ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
3. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்
டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
4. பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை-மருத்துவமனை நிர்வாகம் தகவல்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.