தேசிய செய்திகள்

உள்துறை மந்திரி அமித்ஷா குணமடைந்தார் + "||" + Home Minister Amit Shah has recovered

உள்துறை மந்திரி அமித்ஷா குணமடைந்தார்

உள்துறை மந்திரி அமித்ஷா குணமடைந்தார்
உள்துறை மந்திரி அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தார்.
புதுடெல்லி,

உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு (வயது 55) கடந்த 2-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதில் குணமடைந்த அவர் கடந்த 14-ந்தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். பின்னர் கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த 18-ந்தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் பலனாக அவர் தற்போது குணமடைந்துள்ளார்.


இந்த தகவலை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது. மேலும் அமித்ஷா விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. முன்னதாக உடல் சோர்வு மற்றும் உடல் வலிக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் எய்ம்ஸ் நிர்வாகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷா குணமடைந்த தகவல் பா.ஜனதா தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...