ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: ஸ்டெர்லைட் நிறுவன வழக்கு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு


ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு: ஸ்டெர்லைட் நிறுவன வழக்கு நாளை விசாரணை - சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Aug 2020 2:24 AM GMT (Updated: 30 Aug 2020 2:24 AM GMT)

ஸ்டெர்லைட் நிறுவன ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கில் நாளை விசாரணை என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.

புதுடெல்லி, 

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம், துப்பாக்கி சூடு போன்றவற்றால் பெரும் பதற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கேட்டும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்று கடந்த 18-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு மீது, நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், நவீன் சின்கா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நாளை (திங்கட்கிழமை) விசாரணை நடைபெறுவதாக சுப்ரீம் கோர்ட்டு இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.

Next Story