44 -ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்


44 -ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 30 Aug 2020 4:30 AM GMT (Updated: 30 Aug 2020 4:30 AM GMT)

தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது.

புதுடெல்லி,

தென்மேற்கு பருவ மழை கடந்த மாதம்(ஜூலை) 10 சதவிகிதம் வழக்கத்தை விட குறைவாக பெய்தது. ஆனால், நடப்பு ஆகஸ்ட் மாதம் 25 சதவிகிதம் அதிகமாக பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் தென் இந்திய பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவாக நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்,  25 சதவிகிதம் கூடுதலாக  பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், “  நாடு முழுவதும் இந்த ஆண்டு தற்போது வரை  296.2 மி.மீட்டர்  மழை பதிவாகியுள்ளது. சராசரியாக  237.2  மி.மீட்டர் எனற அளவே ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவ மழை பதிவாகும். 

மத்திய இந்தியாவில் தென்மேற்கு பருவமழை அதிக அளவில் பொழிந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 57 சதவிகிதம் கூடுதலாக ம்ழை பெய்துள்ளது. தென் இந்தியாவிலும் 42 சதவிகிதம் கூடுதலாக நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்துள்ளது. 

எனினும், செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட குறைவாகவே மழை இருக்கும். வடகிழக்கு இந்திய பகுதிகளில் ஆகஸ்ட் மாதம் போதிய அளவு மழை பெய்யவில்லை. வரும் 5 ஆம் தேதிக்கு பிறகு வடகிழக்கு மாநிலங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது இதனால், அங்கு வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது” என்று தெரிவித்தனர்.

Next Story