இந்தியாவில் கொரோனா பரிசோதனை 4.14 கோடியாக உயர்வு


இந்தியாவில் கொரோனா பரிசோதனை 4.14 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 30 Aug 2020 8:26 AM GMT (Updated: 30 Aug 2020 8:26 AM GMT)

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய இதுவரை 4,14- கோடி சளி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது.

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய நேற்று வரை 4,14,61,636 -சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,55,027 - சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

Next Story