கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் 3-ந் தேதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை


கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் 3-ந் தேதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை
x
தினத்தந்தி 30 Aug 2020 5:49 PM GMT (Updated: 30 Aug 2020 5:49 PM GMT)

கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து வங்கி அதிகாரிகளுடன் 3-ந் தேதி நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பரவலால் வங்கித்துறையும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடன் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகளை வங்கிகள் சந்தித்து வருகின்றன. இதில் இருந்து மீண்டுவர ரிசர்வ் வங்கி சமீபத்தில் தீர்வு திட்டத்தை வெளியிட்டு இருந்தது. இந்த தீர்வு திட்டத்தை அமல்படுத்துதல் மற்றும் கடன் அழுத்தத்தை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.

இதில், வணிகங்கள் மற்றும் வீடுகளை நம்பகத்தன்மையின் அடிப்படையில் மறுமலர்ச்சி கட்டமைப்பு பெறுவதற்கு உதவுதல், வங்கி கொள்கைகளை இறுதி செய்தல் மற்றும் கடன் வாங்குபவர்களை அடையாளம் காண்பது போன்ற தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும். மேலும் மென்மையான மற்றும் விரைவான செயலாக்கத்துக்கு தீர்வு காண வேண்டிய சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story