தேசிய செய்திகள்

நீட் தேர்வுக்கு பதில் பொம்மை பற்றி பேசுவதா? - பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி + "||" + Talking about the toy in response to the NEET exam? - Rahul Gandhi question to the Prime Minister

நீட் தேர்வுக்கு பதில் பொம்மை பற்றி பேசுவதா? - பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி

நீட் தேர்வுக்கு பதில் பொம்மை பற்றி பேசுவதா? - பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி
நீட் தேர்வுக்கு பதில் பொம்மை பற்றி பேசுவதா? என்று பிரதமருக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,

பிரதமர் மோடி நேற்று வானொலியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பேசுகையில், “இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகளுக்கு பெரும் பாரம்பரியம் உள்ளது. ஒட்டுமொத்த உலகத்துக்கும் பொம்மைகள் செய்யும் வகையில் இந்தியாவை உயர்த்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.


இந்நிலையில், மோடியின் பேச்சை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

கொரோனா பரவல் சமயத்தில், நீட், ஜே.இ.இ. தேர்வுகள் நடத்துவதை எதிர்க்கும் மாணவர்கள், தேர்வுகள் பற்றி பிரதமர் ஆலோசனை நடத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், பிரதமரோ பொம்மைகள் தயாரிப்பது பற்றி ஆலோசனை வழங்குகிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.