முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு


முதுநிலை மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரம் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 5:58 AM GMT (Updated: 31 Aug 2020 5:58 AM GMT)

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கிடு அளிக்கும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மலை கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில்  சேவை மனப்பான்மையுடன் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில்  தமிழக அரசு சிறப்பு சலுகை வழங்கி வருகிறது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  மருத்துவ உயர் படிப்பில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு  மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என  அதிரடியாக தீர்ப்பளித்தது.  

மேலும், இடஒதுக்கீடு வழங்குவதற்கோ ரத்து செய்வதற்கோ இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை எனவும்  முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கிடு அளிக்கும் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


Next Story