மாநில செய்திகள்

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம் + "||" + TN CM EPS Writes to Pm modi on GST issue

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்
தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,

தமிழகத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தியதில் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு இழப்பீடு வழங்கச் சட்டத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.  மேலும், ஏப்ரல் 1 முதல் இன்று வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை 12 ஆயிரத்து 250 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா சூழலில் நலவாழ்வுக் கட்டமைப்பை மேம்படுத்தவும் நிவாரணப் பணிகளுக்கும் தமிழக அரசுக்குக் கூடுதலாக ஏழாயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மாநிலங்களுக்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டிய தொகையை மத்திய அரசே கடன்பெற்று மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.