தேசிய செய்திகள்

உண்மையைத் தேடுவதில் ஆர்வம் இல்லாத ஒருவர் பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளைக் குற்றம் சாட்டுகிறார்- ராகுல் காந்தி + "||" + On Nirmala Sitharamans Act of God comment Rahul Gandhis Asatyagrahi comeback

உண்மையைத் தேடுவதில் ஆர்வம் இல்லாத ஒருவர் பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளைக் குற்றம் சாட்டுகிறார்- ராகுல் காந்தி

உண்மையைத் தேடுவதில் ஆர்வம் இல்லாத ஒருவர் பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளைக் குற்றம் சாட்டுகிறார்- ராகுல் காந்தி
உண்மையைத் தேடுவதில் ஆர்வம் இல்லாத ஒருவர் பொருளாதார வீழ்ச்சிக்கு கடவுளைக் குற்றம் சாட்டி உள்ளார் என ராகுல் காந்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தாக்கி உள்ளார்.
புதுடெல்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று  மோடி அரசை  தாக்கி வீடியோ வெளியிட்டு உள்ளார்.  “40 ஆண்டுகளில் நாடு முதன்முறையாக நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சோகம்”என அதில்கூறி உள்ளார்.

மேலும் வீடியோவில் “அசாதியாகிராஹி” (உண்மையைத் தேடுவதில் ஆர்வம் இல்லாத ஒருவர்) வீழ்ச்சிக்கு கடவுளைக் குற்றம் சாட்டி உள்ளார்


அர்த்தவ்யவாஸ்தா கி பாத் ராகுல் காந்தி கே சாத்’ அல்லது ‘ராகுல் காந்தியுடன் பொருளாதாரத்தின் நிலை’ என்ற வீடியோ தொடரில், பாஜக அரசு பொருளாதாரத்தின் முறைசாரா கட்டமைப்பைத் தாக்கி மக்களை அடிமைகளாக மாற்ற முயற்சித்ததாக காங்கிரஸ் தலைவர் கூறினார்.

மேலும் அவர் கூறும் போது

"2008 இல், உலகம் ஒரு பொருளாதார புயலால் பாதிக்கப்பட்டது. இது அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட முழு உலகையும் பாதித்தது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டன, ஆனால் காங்கிரஸ் அரசாங்கத்தின் தலைமையில் இந்தியா பாதிக்கப்படாமல் இருந்தது.

மந்தநிலை காரணமாக இந்தியா உலகின் பிற பகுதிகளைப் போல எவ்வாறு நஷ்டத்தை சந்திக்கவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிடம் கேட்டேன் என்றும், நாட்டிற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா பொருளாதாரங்கள் இரண்டு வகையான பொருளாதாரங்கள் உள்ளன என்றும்  அவர் கூறினார் 

விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மற்றும் தொழிலாளர்கள் அடங்கிய நாட்டின் அமைப்புசாரா துறை வலுவாக இருக்கும் வரை எந்த பொருளாதார புயலும் இந்தியாவை வீழ்த்த முடியாது என்று சிங் தனக்கு விளக்கினார்.

"கடந்த ஆறு ஆண்டுகளாக, பாஜக அரசு முறைசாரா துறையைத் தாக்கி அழிக்கிறது. மேலும் பணமதிப்ப்பிழப்பி நடவ்டிக்கை,  "தவறான" சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் கொரோனா ஊரடங்கு  ஆகியவை இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுகள்.

“ஊரடங்கு கடைசி நிமிடத்தில் திட்டமிடப்படவில்லை, அதற்கு பதிலாக இந்த மூன்று நகர்வுகளின் நோக்கம் (பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி மற்றும் ஊரடங்கு) முறைசாரா துறையை அழிப்பதாகும்.

முறைசாரா துறையில் பணிபுரியும் 40 கோடி மக்கள் கடுமையான வறுமையை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையை மேற்கோளிட்டு அவர் கூறினார். கடந்த நான்கு மாதங்களில் குறைந்தது இரண்டு கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர்.

முறைசாரா துறையில் அரசாங்கத்தால் தொட முடியாத ஏராளமான பணம் இருப்பதாகவும், எனவே அவர்கள் பணத்தை மிரட்டி பணம் பறிக்க அந்த துறையை உடைக்க முயற்சிக்கிறார்கள். "இதன் விளைவாக, முறைசாரா துறை 90 சதவீதத்திற்கும மேற்பட்ட வேலைகளை உருவாக்குவதால் இந்தியா வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. 45 ஆண்டுகளில் வேலையின்மை மிக அதிகமாக இருக்கும்.

அரசு மக்களை ஏமாற்றுகிறது, எனவே இதை எதிர்த்து நாடு ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
 
\