தேசிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம்: தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு- பிரசாந்த் பூஷன் + "||" + Will Respectfully Pay Re 1 Fine Prashant Bhushan After Top Court Order

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம்: தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு- பிரசாந்த் பூஷன்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம்: தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு- பிரசாந்த் பூஷன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் சுப்ரீம் கோர்ட்டின் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வேன் பிரசாந்த் பூஷன் கூறி உள்ளார்.
புதுடெல்லி

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்டே மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளை டுவிட்டரில் விமர்சித்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீது சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தது. இதில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என ஆகஸ்ட் 14ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்  கருத்துக்கு மன்னிப்பு கேட்குமாறு அறிவுறுத்தியது.


ஆனால், அதற்கு பிரசாந்த் பூஷண்மறுத்துவிட்ட நிலையில், தண்டனை விவரம் குறித்த அறிவிப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று பிரசாந்த் பூஷணுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

ஒரு ரூபாய்  அபராதம் கட்ட வேண்டும் என்றும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஒரு ரூபாய் கட்டத் தவறினால் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணிபுரியத் தடை என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து பிரசாந்த் பூஷண் கூறும் போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்துள்ள ஒரு ரூபாய் அபராதத்தை செலுத்த்துவேன். நீதிமன்றத்தை அவமதிக்கும் எண்ணம் இல்லை.

நான் நீதிமன்றத்தை அவமதிக்கும் நோக்கில் டுவீட் செய்யவில்லை, என்னுடைய வேதனையையே வெளிப்படுத்தினேன், அதில் நான் உறுதியாக உள்ளேன்.

நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வேன் என பிரசாந்த் பூஷன் கூறி உள்ளார்