கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் 500 சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் ; சீன ராணுவம் மறுப்பு


கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் 500 சீன ராணுவ வீரர்கள் ஊடுருவல் ; சீன ராணுவம் மறுப்பு
x
தினத்தந்தி 31 Aug 2020 1:24 PM GMT (Updated: 31 Aug 2020 1:24 PM GMT)

கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் 500 சீன ராணுவ வீரர்கள் ஊடுருவினர் இதனை இந்திய வீரர்கள் முறியடித்தனர். இதனை சீன ராணுவம் மறுத்து உள்ளது.

புதுடெல்லி

லடாக்கின் கிழக்கு உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறிய சீன ராணுவ வீரர்களுக்கும், இந்திய வீரர்களுக்கும் கடந்த மாதம் 15-ந் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35 பேர் உயிர் இழந்தனர். ஆனால் சீன தரப்பில் உயிரிழப்பு விவரங்களை வெளியிடவில்லை

கால்வான் பள்ளத்தாக்கு மற்றும் ரோந்து புள்ளி 15 இல் ஆரம்ப படைகள் விலகி கொண்டாலும் பாங்கோங் ஏரி மற்றும் ரோந்து புள்ளி 17 ஏ என அழைக்கப்படும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து செல்ல சீனா தயக்கம் காட்டுகிறது.

லடாக் எல்லையில் நேற்று சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.  பாங்காங்க் ஏரியின் தெற்கு கரை பகுதியில் சீன படையினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். சீன ராணுவத்தினரை இந்திய ராணுவம் விரட்டியடித்துள்ளது.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா ராணுவம்  மறுத்து உள்ளது. த்சோ ஏரிக்கு அருகிலுள்ள இந்தியப் பகுதிகளுக்குள் 500 க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் அத்துமீற முயன்றதாக வட்டாரங்கள் இந்தியா டுடே தொலைக்காட்சிக்குத் தெரிவித்தன. எவ்வாறாயினும், சீன  படையினர் நிலைமையை மாற்றுவதற்கான முயற்சிக்கு முன்னர் இந்திய படைகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததால். சீன துருப்புக்களின் முயற்சிகள் இந்திய வீரர்களால் தடுக்கப்பட்டன. இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே எந்தவிதமான மோதலும் ஏற்படவில்லை.


Next Story