தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு: இந்தியாவின் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதமாக சுருங்கியது + "||" + Covid impact: India's Q1 GDP shrinks 23.9%, is the worst over?

கொரோனா பாதிப்பு: இந்தியாவின் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதமாக சுருங்கியது

கொரோனா பாதிப்பு: இந்தியாவின் 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி 23.9 சதவீதமாக சுருங்கியது
கொரோனா தொற்றுநோய் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 2020-21 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 23.9 சதவீதமாக சுருங்கி உள்ளது.
புதுடெல்லி

ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தின் முதல் காலாண்டில் இந்திய உள்நாட்டு உற்பத்தி பெரும் சுருக்கத்தை சந்தித்தது, மேலும் இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் அரசாங்க நிதிகளும் படிப்படியாக மோசமடைந்துள்ளதாக திங்களன்று வெளியிடப்பட்ட இரண்டு தனித்தனி தரவுத் தொகுப்புகள் தெரிவிக்கின்றன.


இந்தியாவின் உள்ந் 2020-21 உற்பத்தி ஆண்டின் முதல் காலாண்டில் கொரோனா தொற்றுநோய் காரணமாக 23.9 சதவீதமாக சுருங்கியது. இது இந்தியாவின் பதிவுசெய்யப்பட்ட புள்ளிவிவர வரலாற்றிலிருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது மிக மோசமான சுருக்கமாகும்.

இந்தியாவின் பதிவுசெய்யப்பட்ட புள்ளிவிவர வரலாற்றில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது மிக மோசமான சுருக்கமாகும். 2019-20 ஜனவரி - மார்ச் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.1% ஆக உயர்ந்துள்ளது.

நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக ஓட்டல் மற்றும் போக்குவரத்து போன்ற உற்பத்தி, கட்டுமான மற்றும் சேவைத் துறைகளை பாதித்தது. இதே காலத்தில் முந்தைய ஆண்டில் பொருளாதாரம் 5.2 சதவீதமாக வளர்ச்சி அடைந்து இருந்தது.

தேசிய புள்ளிவிவர அலுவலகம்  வெளியிட்டுள்ள தகவல்கள், இந்த காலாண்டில் கட்டுமான நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அது 50 சதவிகிதம் சுருங்கி உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக வர்த்தகம், ஓட்டல்கள் மற்றும் போக்குவரத்து துறை 47 சதவிகிதம் மற்றும் உற்பத்தி துறை 39 சதவிகிதம் என சுருக்கம் கண்டுள்ளது. வேளாண்மை மட்டுமே வெள்ளி சம்பந்தப்பட்ட துறை மட்டும், இந்த காலாண்டில் 3.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து உள்ளது.

தொற்றுநோயால் தனியார் நுகர்வு செலவு 27 சதவீதம் சுருங்கி உள்ளது.ரிசர்வ் வங்கி  கடந்த வாரம் வெளியிடப்பட்ட தனது வருடாந்திர அறிக்கையில், தொற்றுநோயால் தனிநபரின் செலவினங்களில் ஏற்பட்டுள்ள குறைவு மற்றும் அதனால் ஏற்படும் பாதகமான தாக்கத்தையும், தேவை குறைந்த நுகர்வோர் நம்பிக்கை அளவையும் கோடிட்டு காட்டியது.

மொத்த நிலையான மூலதன உருவாக்கம் - பொருளாதாரத்தில் முதலீட்டு தேவையின் ஒரு குறிகாட்டியாகும். காலாண்டில் 48 சதவீதம் சுருங்கியது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதியும் இந்த காலகட்டத்தில் சுருங்கியது.

அரசாங்கத்தின் இறுதி நுகர்வு செலவினத்தால் பொருளாதாரத்திற்கு ஊக்கத்தை வழங்கியது. இதனால் இந்த காலாண்டில் 20 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவில் இருந்து தப்பிப்பதை விட நீங்கள் லாட்டரியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் -உலக சுகாதார நிபுணர்
அதிர்ஷ்டம் பாதுகாக்காது: உலகில் 200ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
2. 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் - டொனால்டு டிரம்ப்
இன்னும் 3 முதல் 4 வாரங்களில் கொரோனா தடுப்பூசி தயாராகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உறுதியாக அறிவித்துள்ளார்.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மாவட்டம் வாரியாக விவரம் வெளியாகி உள்ளது.
4. புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து தரவு எதுவும் இல்லை: பின்னடைவுக்கு பிறகு மத்திய அரசு விளக்க அறிக்கை
புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்து "தரவு எதுவும் இல்லை" என கூறிய மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து புலம்பெயர்ந்தோர் இறப்பு குறித்த அரசாங்கத்தின் தெளிவு படுத்தும் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
5. உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்- உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்கள்
உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்து உள்ளார்.