இந்தியா-ரஷியா கூட்டு கடற்படை பயிற்சி செப்டம்பர் 4 ஆம் தேதி அந்தமான் கடலில் நடைபெறுகிறது


இந்தியா-ரஷியா கூட்டு கடற்படை பயிற்சி செப்டம்பர் 4 ஆம் தேதி அந்தமான் கடலில் நடைபெறுகிறது
x
தினத்தந்தி 31 Aug 2020 4:24 PM GMT (Updated: 31 Aug 2020 4:24 PM GMT)

இந்தியா-ரஷியா கூட்டு கடற்படை பயிற்சி செப்டம்பர் 4 ஆம் தேதி அந்தமான் கடலில் நடைபெற உள்ளது

புதுடெல்லி

ரஷியா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் இராணுவமும் பல்வேறு கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.அதன் படி கவ்காஷ் 2020 என்ற கூட்டு இராணுவப் பயிற்சியில் ரஷியா மற்றும் வேறொரு நாட்டுடன் இணைந்து இந்தியா செப்டம்பர் மாதம் பயிற்சி மேற்கொள்ள இருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த பயிற்சியை தவிர்ப்பதாக இந்திய இராணுவத்துறை அறிவித்தது. அதுமட்டுமின்றி, மேலும் சில சர்வதேச கூட்டுப்பயிற்சிகளை இந்திய இராணுவம் கைவிட்டது.

தற்போது இந்தியா, ரஷியாவுடனான கூட்டுப் பயிற்சியில் இருந்து இந்திய விலகியதை தொடர்ந்து கவ்காஷ் 2020 கூட்டுப் பயிற்சியில் ரஷியாவுடன் சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்துள்ளன.

லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவுடனான மோதல் போக்கு இன்னும் முடிவுக்கு வராத காரணத்தினால் கூட்டுப் பயிற்சியில் இருந்து இந்தியா விலகியதாக தகவல் தெரிவிக்கின்றன.அத்துடன் லடாக் எல்லையில் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை பாதுகாப்பை இந்தியா பலப்படுத்த முடிவு செய்திருப்பதால், இராணுவ வீரர்களை பயிற்சிக்கு அனுப்புவதை தவிர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் செப்டம்பர் 4 ஆம் தேதி இந்தியா-ரஷ்யா கூட்டு கடற்படை பயிற்சி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்திய கடற்படை ரஷ்ய கடற்படையுடன் மூன்று கப்பல்களுடன் உடற்பயிற்சியில் ஈடுபடும் என கூறப்படுகிறது.

ரஷ்யாவுடன் இந்தியாவுக்கு வலுவான உறவுகள் உள்ளன என்பதற்கான வலுவான நினைவூட்டலாக இது அமையும் என்று கூறப்படுகிறது.

கொரோனாதொற்றுநோய் காரணமாக, இந்தியா இந்த நிகழ்விலிருந்து விலகியது. எனவே செப்டம்பர் 4 ஆம் தேதி ரஷியாவுடன் ஒரு பயிற்சி நடைபெறும். சீனக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்கு வர வேண்டுமானால், அவர்கள் அங்கிருந்து வர வேண்டும்.

Next Story