தேசிய செய்திகள்

பிரணாப் முகர்ஜி மறைவு: அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல் + "||" + Pranab Mukherjee No More: US Condoles His Demise, Says He Will Be 'forever Remembered'

பிரணாப் முகர்ஜி மறைவு: அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல்

பிரணாப் முகர்ஜி மறைவு:  அமெரிக்க வெளியுறவுத்துறை இரங்கல்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்,

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மூளையில் ஏற்பட்ட இரத்தக் கட்டி பிரச்சினை  காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (திங்கள் கிழமை) மாலை உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், முக்கிய அதிகாரிகளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ''மறைந்த முன்னாள் ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கக்கூடிய தலைவரை இழந்து வாடும் இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பிரணாப் முகர்ஜிக்கு ராசியாக அமைந்த 13-ம் எண்
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 13-ம் எண் ராசியானதாக அமைந்துள்ளது.
2. பிரணாப் முகர்ஜி மறைவுக்கு வங்காளதேசத்தில் துக்கம் அனுசரிப்பு - டிரம்ப், ராஜபக்சே இரங்கல்
பிரணாப் முகர்ஜியின் மறைவுக்கு வங்காளதேசத்தில் நேற்று துக்கம் அனுசரிக்கப்பட்டது. டிரம்ப், ராஜபக்சே ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
3. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
4. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று மாலை 4.30 மணியளவில் காலமானார்.
5. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் பின்னடைவு: மருத்துவமனை
பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது