தேசிய செய்திகள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி ஏற்பு + "||" + Rajeev Kumar replaces Ashok Lavasa as Election Commissioner

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி ஏற்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி ஏற்பு
தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்ட ராஜீவ் குமார் இன்று புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுடெல்லி,

முன்னாள் மத்திய நிதித்துறை செயலா் ராஜீவ் குமாரை தோதல் ஆணையராக நியமிக்க  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, இன்று அவர் தேர்தல் ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

கடந்த 1984-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் பிரிவைச் சோந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமாா், அசோக் லவாசாவின் ராஜிநாமாவை தொடா்ந்து தோதல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

ஆசிய வளா்ச்சி வங்கியின் துணைத் தலைவராக அசோக் லவாசா பணிபுரிய உள்ளாா். இதனால் தனது தோதல் ஆணையா் பதவியை அவா் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு பதவியில் இருந்து விலகியது நினைவிருக்கலாம்.