இந்தியாவின் ஜனநாயகம்- சமூக நல்லிணக்கம் மீது பேஸ்புக்- வாட்ஸ்அப்பின் வெட்கக்கேடான தாக்குதல் சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன- ராகுல்காந்தி

இந்தியாவின் ஜனநாயகம்- சமூக நல்லிணக்கம் மீது பேஸ்புக்- வாட்ஸ்அப்பின் வெட்கக்கேடான தாக்குதல் சர்வதேச ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன- ராகுல்காந்தி
x
தினத்தந்தி 1 Sep 2020 8:56 AM GMT (Updated: 1 Sep 2020 8:56 AM GMT)

இந்தியாவில் பேஸ்புக், வாட்ஸ்அப்பின் செயல்பாடுகள் குறித்து விசாரித்து, தவறு செய்திருந்தால் தண்டனை அளிக்க வேண்டும் என்றும் ராகுல் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி

புகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று  மீண்டும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் "இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை" தாக்கியதாக குற்றம் சாட்டினார்,

பேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றை பாஜக கட்டுப்படுத்துவதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டதாக காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் டுவிட்டரில் ராகுல் வெளியிட்ட பதிவில், "இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் சமூக நல்லிணக்கம் மீதான பேஸ்புக்கின் & வாட்ஸ்அப்பின் வெட்கக்கேடான தாக்குதலை சர்வதேச ஊடகங்கள் முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளன.

நமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிட வெளிநாட்டு நிறுவனத்தை யாரும் அனுமதிக்கக் கூடாது என்றும், அவர்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் மற்றும் குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டால், தண்டிக்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

International media have fully exposed Facebook’s & WhatsApp's brazen assault on India's democracy & social harmony.

No one, let alone a foreign company, can be allowed to interfere in our nation's affairs.

They must be investigated immediately & when found guilty, punished. pic.twitter.com/5tRw797L2y
— Rahul Gandhi (@RahulGandhi) September 1, 2020

Next Story