நாடு முழுவதும் விரைவில் மேலும் 100 பயணிகள் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே அமைச்சகம் திட்டம்


நாடு முழுவதும் விரைவில் மேலும் 100 பயணிகள் சிறப்பு ரெயில்களை இயக்க ரெயில்வே அமைச்சகம் திட்டம்
x
தினத்தந்தி 1 Sept 2020 5:06 PM IST (Updated: 1 Sept 2020 5:06 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி: 

கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் வழக்கமான ரெயில், விமான சேவை முடக்கப்பட்டுள்ளது.விமான சேவைகள் ஓரளவு தொடங்கி விட்டன. ரெயில் சேவை தொடங்கவில்லை. கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு பிறகு, மே 12ம் தேதி முதல், தலைநகர் டெல்லி யிருந்து சென்னை, பெங்களூரு, அகமதாபாத், பாட்னா உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாக ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக, ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் மேலும் பல சிறப்பு ரெயில்களை இயக்க திட்டமிட்டு உள்ளோம். இதுகுறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 100 பயணிகள் ரெயில்களை இயக்குவதை இந்திய ரெயில்வே விரைவில் அறிவிக்கும். இவை மாநிலங்களுக்குள்  மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான ரெயில்களாக இருக்கும்.

ரெயில்வே அமைச்சகம் உள்துறை அமைச்சகத்திலிருந்து அனுமதிக்காக காத்திருக்கிறது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த ரெயில்கள் அனைத்தும் "சிறப்புரெரயில்கள்" என்று பெயரிடப்படும்.

தற்போது, 230 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன, இதில் 30 ராஜதான வகை ரயில்கள் உள்ளன.
இந்த ரெயில்களின் நேரம் மாற்றப்படாது என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேவை மற்றும் கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு கூடுதல் ரெயில்கள் ஒவ்வொரு  கட்டங்களாக அறிவிக்கப்படும் என்று ரெயில்வே அமைச்சகம் முன்பு கூறியிருந்தது. உண்மையில், முந்தைய திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

இப்போது அன்லாக் 4.0 அறிவிக்கப்பட்டதும், மெட்ரோ ரயில் சேவைகளும் செப்டம்பர் முதல் தொடங்கி, தொழிலாளர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்வதற்கான அதிக தேவைகள் உள்ளது.


Next Story