லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம்: உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை
லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.
புதுடெல்லி,
கிழக்கு லடாக் எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவுவதால், உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பங்கோங் சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29-ந் தேதி இரவு சீன வீரர்கள் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story