‘பேஸ்புக்’ நிறுவனருக்கு மத்திய மந்திரி கடிதம் பிரதமரை ஊழியர்கள் வசைப்பாடுவதாக குற்றச்சாட்டு


‘பேஸ்புக்’ நிறுவனருக்கு மத்திய மந்திரி கடிதம் பிரதமரை ஊழியர்கள் வசைப்பாடுவதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 2 Sept 2020 8:12 AM IST (Updated: 2 Sept 2020 8:12 AM IST)
t-max-icont-min-icon

‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கடிதம் எழுதி உள்ளார்.

புதுடெல்லி,

பேஸ்புக் இந்தியா நிர்வாகம் பா.ஜனதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி இருந்தது. இந்நிலையில், பேஸ்புக் இந்தியா மீது பா.ஜனதாவும் குற்றம் சாட்டி உள்ளது.

இதுகுறித்து ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்குக்கு மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போதே வலதுசாரி கொள்கையை ஆதரிப்பவர்களின் பக்கங்களை நீக்கியதுடன், அவர்களது கருத்துகள் பெரிதாக சென்றடையாதவண்ணம் பேஸ்புக் இந்தியா ஊழியர்கள் பார்த்துக்கொண்டனர். இந்த பாரபட்சம் குறித்து 10-க்கும் மேற்பட்ட மின்னஞ்சல் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மக்களால் அடுத்தடுத்து நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கே அந்த ஊழியர்கள் ஆதரவாக உள்ளனர். பிரதமர் மோடியையும், மூத்த மத்திய மந்திரிகளையும் வசைப்பாடி வருகிறார்கள். இந்த போக்கு நீடிக்காமல் இருக்க தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story