ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ரஷியா பயணம்
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ரஷியா மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.
இந்த மாநாட்டில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார். இதற்காக ராஜ்நாத் சிங் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாள் பயணமாக ரஷியா புறப்பட்டுச் செல்கிறார்.
இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை நிலவி வரும் நிலையில், இந்த மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் சீன பாதுகாப்புத் துறை மந்திரியும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் மாநாட்டில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் ரஷியா இடையிலான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக ரஷிய ராணுவ மந்திரி செர்ஜி ஷோயுகு மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் வருகிற 10-ந்தேதி நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை மந்திரிகள் மாநாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது.
Related Tags :
Next Story