கேரளாவில் இன்று மேலும் 1,547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கேரளாவில் இன்று மேலும் 1,547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 2 Sept 2020 7:09 PM IST (Updated: 2 Sept 2020 7:09 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் இன்று மேலும் 1,547 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாரதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் புதிதாக 1,547 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களில் 21 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும், 65 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்களுக்கும், 1,419 பேர் உள்ளூர் பரவல் மூலமும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கேரளாவில் இன்று 2,129 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை மொத்தம் 55,782 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 21,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் 1,93,736 பேர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என்று அம்மாநில சுகாரதாரத்துறை மந்திரி கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார். 

Next Story