கொரோனா காலத்தில் தேர்வு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் - மத்திய அரசு வெளியிட்டது
கொரோனா காலத்தில் தேர்வு நடத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் தேர்வுகளும் தவிர்க்க முடியாததாகி விட்டது. குறிப்பாக கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை நடத்த இருக்கிறது. இந்த தேர்வுகளை எழுதும்போது பின்பற்ற வேண்டிய கொரோனா பெருந்தொற்று கால நடைமுறைகளை மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.
அதில் கூறியுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* கட்டுப்பாட்டு மண்டலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அந்த பகுதிகளை சேர்ந்த ஊழியர்களையும் தேர்வு பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
* முக கவசம் அணிவது கட்டாயம். தங்கள் உடல்நிலை குறித்து சுய வாக்குமூலம் அளிப்பதுவும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
* பேனா, காகிதம் பயன்படுத்தி எழுதப்படும் தேர்வுகளில், மேற்பார்வையாளர்கள் வினாத்தாள், விடைத்தாள்களை வினியோகிப்பதற்கு முன்பாக தங்களது கைகளை சுத்தமாக சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* விடைத்தாள்களை எண்ணிப்பார்ப்பதற்கு மேற்பார்வையாளர்கள் எச்சில் பயன்படுத்தக்கூடாது.
* விடைத்தாள்களை மாணவர்களிடம் இருந்து திரும்ப பெறுவதற்கு முன்பும், பெற்ற விடைத்தாள்களை ‘பேக்கிங்’ செய்தற்கு முன்பும் கண்டிப்பாக கைகளை சானிடைசர் திரவம் கொண்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
* ‘பேக்கிங்’ செய்யப்பட்ட விடைத்தாள்களை 72 மணி சேரம் கழித்தே திறக்க வேண்டும்.
* வயதானவர்கள், கர்ப்பிணிகளை, நோயாளிகளை தேர்வு மேற்பார்வையாளர்களாக நியமிக்கக்கூடாது.
* ஆன்லைன் அடிப்படையில், கணினியை பயன்படுத்தி நடத்துகிற தேர்வுகளில் கணினிகளை தேர்வுக்கு முன்பும், பின்பும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும்.
* கொரோனா அறிகுறியற்ற பணியாளர்கள், மாணவர்கள் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும்.
* ஊழியர்ளுக்கும், மாணவர்களுக்குமான முக கவசங்கள், சானிடைசர் திரவம், சோப்பு, சோடியம் ஹைபோகுளோரைடு திரவம் ஆகியவற்றுக்கு பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், தேர்வு அதிகாரிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும்.
* தேர்வு மையங்களின் நுழைவாயில்களில் கட்டாயம் சுகாதார வசதிகள், வெப்ப நிலை பரிசோதனை ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
* அறிகுறிகளுடன் யாரேனும் கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்துவதற்கு தனியறை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
* அறிகுறி உள்ள மாணவர்களை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் தேர்வு எழுத தகுதியான பின்னர் வேறு வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். அப்படியில்லாமல் அந்த மாணவர் அறிகுறிகளுடன்கூட தேர்வு எழுத வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தால், அவரை தனியறையில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
* தனி மனித இடைவெளியை பின்பற்றும் வகையில் தேர்வு அறையில் இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
* பல்கலைக்கழகம், கல்லூரி சார்பில் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்தால், அந்த போக்குவரத்து சாதனங்களை முறையாக கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* தேர்வு அறை, பிற பொதுவான பகுதிகள் தேர்வுக்கு முன்னும், பின்னும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகளும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்கப்படவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story