ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 3 Sept 2020 7:43 PM IST (Updated: 3 Sept 2020 7:43 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திர மாநிலத்தில் இன்று 10,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

ஆந்திர மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆந்திராவில் இன்று ஒரே நாளில் 10,199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,65,730 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனால் ஆந்திராவில் இதுவரை கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,200 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில் இன்று மட்டும் 9,499 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,57,829 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திராவில் தற்போது 1,03,701 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்த மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story