இந்திய துணை கண்டத்தை சீனா சுற்றி வளைக்கிறது - சரத்பவார் எச்சரிக்கை


இந்திய துணை கண்டத்தை சீனா சுற்றி வளைக்கிறது - சரத்பவார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Sept 2020 6:40 AM IST (Updated: 4 Sept 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

இந்திய துணை கண்டத்தை சீனா சுற்றிவளைப்பதாக சரத்பவார் எச்சரித்து உள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான சரத்பவார் முன்னாள் வௌியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே, ஓய்வுபெற்ற ஏர் மார்ஷல் பூசண் கோகலே ஆகியோரை அவரின் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களான சுப்ரியா சுலே, பிரபுல் பட்டேல், அமோல் கோல்கே, வந்தனா சவான் ஆகியோருடன் கிழக்கு லடாக் பிரச்சினை குறித்து விவாதிக்க அழைப்பு விடுத்து இருந்தார்.

அப்போது சரத்பவார் சீனாவின் அரசியல் சிந்தனை, இந்திய பொருளாதார வளர்ச்சியை தடுக்கும் அவர்களின் நோக்கம் குறித்து பேசினார்.

இது குறித்து சரத்பவார் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

எல்லா திசைகளில் இருந்தும் சீனா இந்திய துணை கண்டத்தை மறைமுகமாக சுற்றி வளைக்கிறது. இதன் பின்னால் உள்ள உண்மை குறித்து நான் விவரித்து பேசினேன். தென் சீன கடல் பகுதியில் அவர்களின் நடமாட்டம் குறித்து கவலையை வெளிப்படுத்தினேன். பொது விவகாரங்களில் சீன தலையீடு மற்றும் இலங்கை, நேபாளம் உறவையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என கூறினேன். இந்திய- சீன உறவு வரலாறு குறித்து விஜய் கோகலே பேசினார்.

இவ்வாறு சரத்பவார் கூறியுள்ளார்.

Next Story