5 மாதத்துக்கு பிறகு புனேயில் நகர பஸ் போக்குவரத்து தொடங்கியது


5 மாதத்துக்கு பிறகு புனேயில் நகர பஸ் போக்குவரத்து தொடங்கியது
x
தினத்தந்தி 4 Sept 2020 11:56 AM IST (Updated: 4 Sept 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

5 மாதத்துக்கு பிறகு புனேயில் நேற்று முதல் நகர பஸ் போக்குவரத்து தொடங்கியது.

மும்பை, 

கொரோனா ஊரடங்கு காரணமாக புனே நகரில் கடந்த 5 மாதமாக நகர பஸ்கள் ஓடவில்லை. 

இந்த நிலையில் ஊரடங்கின் தளர்வாக நேற்று முதல் நகர பஸ்கள் ஓடத்தொடங்கின. முதல் நாளான நேற்று 25 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. ஒவ்வொரு பஸ்களிலும் 17 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பஸ்சில் பயணிக்க அனுமதி இல்லை.

பஸ்களை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

புனேயில் 5 மாதங்களுக்கு பிறகு நகர பஸ் சேவை தொடங்கி இருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Next Story