மேற்கு வங்கத்தில் சனிக்கிழமையும் வங்கிகள் செயல்பட அம்மாநில அரசு அனுமதி
மேற்குவங்கத்தில் வர்த்தக சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொல்கத்தா,
மேற்குவங்கத்தில் வர்த்தக சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால், மேற்குவங்கத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு கடந்த ஜூலை 20 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வருவதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்விளைவாக தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் செயல்படத் தொடங்கியுள்ளதால், சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படலாம் என்று மேற்கு வங்க அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரிசர்வ் வங்கி விதியான 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story