ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்


ஆந்திரா, கேரளா மாநிலங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 4 Sep 2020 2:22 PM GMT (Updated: 4 Sep 2020 2:22 PM GMT)

ஆந்திராவில் இன்று 10,776-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தினம் தினம் உயர்ந்து கொண்டே வருவதை காண முடிகிறது. கொரோனா  வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. நாட்டிலேயே முதன் முதலாக தொற்று பதிவான கேரளாவிலும் சமீப காலமாக தொற்று வேகமாக பரவி வருகிறது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அங்கு புதிதாக 2,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி 18,800- பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தாக 58,498 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

ஆந்திராவில் இன்று மேலும் 10,776-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 12,334- பேர் குணம் அடைந்த நிலையில், 76-பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,76,506-ஆக உள்ளது. 

அதேபோல், 4,276-பேர் இதுவரை அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் ஆந்திராவில் 1,02,067-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story