40 ஆண்டு கால அனுபவத்தில் கன்னட திரையுலகில் போதைப்பொருள் கலாசாரத்தை பார்க்கவில்லை - நடிகை சுமலதா எம்.பி.


40 ஆண்டு கால அனுபவத்தில் கன்னட திரையுலகில் போதைப்பொருள் கலாசாரத்தை பார்க்கவில்லை - நடிகை  சுமலதா எம்.பி.
x
தினத்தந்தி 5 Sept 2020 9:47 AM IST (Updated: 5 Sept 2020 9:47 AM IST)
t-max-icont-min-icon

40 ஆண்டு கால அனுபவத்தில் கன்னட திரையுலகில் போதைப்பொருள் கலாசாரத்தை பார்க்கவில்லை என்று நடிகை சுமலதா எம்.பி. தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டி பெங்களூருவில் நேற்று முன்தினம் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகையும், மண்டியா தொகுதி எம்.பி.யுமான சுமலதா அம்பரீஷ் கலந்துகொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நான் கன்னட திரையுலகில் 40 ஆண்டுகளாக நடித்து வருகிறேன்.

எனது 40 ஆண்டு அனுபவத்தில் கன்னட திரையுலகில் போதைப்பொருள் கலாசாரம் இல்லை. நான் பிரபலமானவர் அல்ல. இருப்பினும் ஒரு மகனுக்கு தாயாக இருப்பதால் இதை சொல்கிறேன், இளைஞர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.

போதைப்பொருள் விற்பனை அனைத்து பகுதிகளிலும் நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும். போதைப்பொருள் விவகாரத்தில் திரையுலகினரிடம் விசாரணை நடத்த கூடாது என்றார்.

Next Story