தேசிய நல்லாசிரியர் விருது: காணொலி காட்சி வாயிலாக ஜனாதிபதி வழங்கினார்


தேசிய நல்லாசிரியர் விருது: காணொலி காட்சி வாயிலாக ஜனாதிபதி வழங்கினார்
x
தினத்தந்தி 5 Sept 2020 12:31 PM IST (Updated: 5 Sept 2020 12:31 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா முழுவதும் 47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி காணொலி வாயிலாக வழங்கினார்.

புதுடெல்லி,

ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அணடு இந்தியா முழுவதிலும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 

ஆசிரியர் தினமான இன்று நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி கவுரவித்தார். காணொலி வாயிலாக நடைபெற்ற விழாவில்  ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். விருது பெற்ற 47 ஆசிரியர்களில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்திலிருந்து சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றனர். 


Next Story