2019ம் ஆண்டின் மாநில வர்த்தக சீர்திருத்த திட்டம் தரவரிசை பட்டியலில் தொடர்ந்து ஆந்திரா முதல் இடம்
2019ம் ஆண்டுக்கான மாநில வர்த்தக சீர்திருத்த திட்டம் தரவரிசை பட்டியலில் ஆந்திர பிரதேசம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
புதுடெல்லி,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2019ம் ஆண்டுக்கான மாநில வர்த்தக சீர்திருத்த திட்டம் தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டார்.
இதில், ஆந்திர பிரதேசம் தொடர்ந்து முதல் இடத்தினை தக்க வைத்து கொண்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கானாவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்துக்கு உத்தர பிரதேசம் முன்னேறியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டில் 12வது இடத்தில் இருந்து இந்த இடத்திற்கு முன்னேறியிருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டில் 2வது இடத்தில் இருந்து தெலுங்கானா 3வது இடத்திற்கு சென்றுள்ளது. தொடர்ந்து 4வது இடத்தில் மத்திய பிரதேசம், 5வது இடத்தில் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதி மந்திரி, சில மாநிலங்கள் செயல் திட்டங்களை ஒன்றிணைப்பதில் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தி, சீர்திருத்தங்கள் நடைபெற்றுள்ளன என்பதனை உறுதி செய்துள்ளன. மாநில வர்த்தக சீர்திருத்த செயல் திட்ட பின்னணியில் உண்மையான உணர்வுடன் மாநிலங்கள் செயல்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story