டெல்லி இந்தியா கேட் பகுதியில் உடற்பயிற்சி செய்ய திரண்ட மக்கள் !


டெல்லி இந்தியா கேட் பகுதியில் உடற்பயிற்சி செய்ய திரண்ட மக்கள் !
x
தினத்தந்தி 6 Sept 2020 8:32 AM IST (Updated: 6 Sept 2020 8:32 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கின் 4 ஆம் கட்ட தளர்வுகள் கடந்த 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வைரஸ் பரவல் கட்டுக்க்குள் வராத நிலையிலும் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஊரடங்கில் கடந்த ஜூன் மாதம் படிபடியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 

ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலில் உள்ளன. 4 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், முக்கிய நகரங்கள் மீண்டும் பரபரப்பாக இயங்கத்தொடங்கியுள்ளன.  அந்த வகையில், தலைநகர் டெல்லியில் இன்று காலை  இந்தியா கேட் பகுதியில் மக்கள் வரத்து அதிகமாக இருந்தது. உடற்பயிற்சி செய்வதற்காக ஏரளாமனோர் அங்கு வந்திருந்தனர். சைக்கிளிங், நடை பயிற்சியில் மக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டனர். 

Next Story