இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக கடந்த 24 மணி நேரத்தில் 90,633 பேருக்கு கொரொனா தொற்று


இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக   கடந்த 24 மணி நேரத்தில் 90,633 பேருக்கு கொரொனா தொற்று
x
தினத்தந்தி 6 Sept 2020 9:44 AM IST (Updated: 6 Sept 2020 10:02 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்தை தாண்டியுள்ளது.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் இன்று மக்களின் சிந்தையை ஆக்கிரமித்து இருக்கும் ஒரே பெயர், கொரோனா. மனுக்குலத்தின் அன்றாட நிகழ்வுகளை முடக்கி வைத்திருக்கும் இந்த பெருந்தொற்று அரசுகளின் இயக்கத்தையும் தடுத்தாள்கிறது. கொத்துக்கொத்தான மரணங்களும், கும்பல் கும்பலான புதிய நோயாளிகளும் அன்றாட நிகழ்வாகிப்போனதால், மருத்துவ துறையே ஆட்டம் காண்கிறது. கண்ணுக்குத்தெரியாத இந்த எதிரியை எதிர்த்து போரிட மருந்துகளோ, தடுப்பூசியோ இல்லாமல் வல்லரசுகளும் நிராயுதபாணிகளாகி இருக்கின்றன.

இப்படி உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் இந்தியாவும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.  இங்கு தொற்றை தடுக்க நடவடிக்கைகள் முடுக்கி விட்டிருந்தாலும் இந்த கொடிய வைரசை தடுக்க முடியவில்லை. தினசரி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில் இன்று  காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் 90, 633-பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை இல்லாத அதிக அளவாக இந்த பாதிப்பு அமைந்து உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,065-பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 41 லட்சத்து 13 ஆயிரத்து 812-ஆக உள்ளது.  தொற்று பாதிப்புடன் 8 லட்சத்து 62 ஆயிரத்து 320-பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 70 ஆயிரத்து 626 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை இந்திய சுகதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


Next Story