3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நிலத்தகராறில் அடித்து கொலை


3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நிலத்தகராறில் அடித்து கொலை
x
தினத்தந்தி 6 Sept 2020 5:04 PM IST (Updated: 6 Sept 2020 5:04 PM IST)
t-max-icont-min-icon

உத்தர பிரதேசத்தில் நிலத்தகராறு ஒன்றில் 3 முறை எம்.எல்.ஏ.வான நிர்வேந்திர மிஷ்ரா அடித்து கொல்லப்பட்டு உள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேசத்தில் லகீம்பூர் கேரி பகுதியில் நிதாசன் தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர் நிர்வேந்திர மிஷ்ரா.  திரிகோலியா படுவா என்ற இடத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றின் அருகே இருந்த நிலம் இவருடையது என கூறப்படுகிறது.

ஆனால், கிஷன் குமார் குப்தா என்பவர் அந்த நிலம் தன்னுடையது என கூறி வருகிறார்.  இந்த விவகாரம் தீர்வு எட்டாமல் நீதிமன்றம் வரை சென்றது.  இந்நிலையில், குப்தா தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் கும்பலாக நிலம் இருந்த பகுதிக்கு சென்றுள்ளார்.  மிஷ்ராவும் தனது ஆதரவாளர்களுடன் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

நிலத்தகராறு விவகாரத்தில் மிஷ்ரா மீது அந்த கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளது.  இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்து உள்ளார்.  அந்த கும்பல் மிஷ்ராவின் மகனையும் தாக்கியுள்ளது.  அவரும் கடுமையாக காயமடைந்து உள்ளார்.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  மிஷ்ராவின் குடும்பத்தினர் போலீசார் குப்தாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.  எனினும் இந்த வழக்கில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Next Story