இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 77.32 சதவீதமாக உயர்வு : மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 77.32 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 41,13,811 பேரில் 31,80,866 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 73,642 பேர் குணமடைந்தனர். இதையடுத்து கொரோனா மீட்பு விகிதம் 77.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
அதேபோன்று, கொரோனாவால் பலியானோர் விகிதம் 1.72 சதவிகிதமாக குறைந்துள்ளது. மேலும் இன்றைய நிலவரப்படி, சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 8,62,320 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு 41,13,811 ஆக அதிகரித்தது. மேலும் 1,065 பேர் உயிரிழந்துள்ளனர். உள்பட 70,626 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story