பெங்களூருவில் கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணுக்கு மீண்டும் பாதிப்பு


பெங்களூருவில் கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணுக்கு மீண்டும் பாதிப்பு
x
தினத்தந்தி 7 Sept 2020 4:34 AM IST (Updated: 7 Sept 2020 4:34 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவருக்கு, மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு காய்ச்சல், இருமல், சளி இருந்ததை அடுத்து அவர் பன்னரகட்டா ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் குணம் அடைந்ததை அடுத்து அதே மாதம் 24-ந் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் கடைசி வாரத்தில் மீண்டும் கொரோனா அறிகுறி அதாவது காய்ச்சல், இருமல் ஏற்பட்டது. அவர் மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. பெங்களூருவில் முதல் முறையாக கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவருக்கு, மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர் கூறியதாவது:-

கொரோனா பாதித்தோருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவது அரிதானது. அதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட தேவை இல்லை. இந்த கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய நாட்களில், வீடு திரும்பிய சிலருக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டதை நாங்கள் பார்த்தோம். கொரோனா பாதித்தோரின் உடலில் ஆன்டிபாடி எவ்வளவு காலம் இருக்கும் என்பதை தான் நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பெரும்பாலானோர், ஆன்டிபாடி பரிசோதனை செய்து கொள்வது இல்லை. அதனால் அவர்களின் உடல்களில் இந்த ஆன்டிபாடி உருவாகி இருக்கிறதா இல்லையா என்பது தெரிவது இல்லை.

இவ்வாறு ஜாவித் அக்தர் கூறினார்.

ஜெயதேவா அரசு இதய நோய் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத் கூறுகையில், “கொரோனா பாதித்தோருக்கு ஆன்டிபாடி குறைவான நாட்கள் மட்டுமே இருந்தால் அத்தகையவர்களுக்கு மீண்டும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்று மீண்டும் பாதிப்பு ஏற்படுவது அரிதானது” என்றார்.

Next Story