ரூ.5 கோடி கடத்தல் துணிகளுடன் சென்ற மீன்பிடி படகு பறிமுதல்; இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை
மேற்கு வங்காளத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கடத்தல் துணிகளுடன் சென்ற மீன்பிடி படகை இந்திய கடலோர காவல் படை பிடித்துள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் டையமண்ட் ஹார்பர் பகுதியருகே சாகர் என்ற பெயரிடப்பட்ட மீன்பிடி படகு ஒன்றை இந்திய கடலோர காவல் படை மற்றும் சுங்க அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் படகில் துணிகள் மறைத்து வைத்து கடத்தப்பட்டது தெரிய வந்தது. அவற்றின் மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து படகில் இருந்தவர்களை பிடித்து சென்று அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டில் சமீப காலங்களாக போதை பொருட்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த 30 கிலோ தங்க கடத்தல், சமீபத்தில் பெங்களூருவில் போதை பொருள் பயன்பாடு, கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று 500 கிலோ போதை பொருள் கடத்தல் மற்றும் பறிமுதல், தொடர்ந்து கேரளாவில் நேற்று வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மீது மோதிய மோதிய வாகனத்தில் இருந்து 4.3 கிலோ தங்கம் பறிமுதல் என தொடர்ச்சியாக கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் கோடிக்கணக்கான மதிப்புடைய துணிகள் கடத்தப்பட்டு அவை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story