டெல்லியில் போலீசாருடன் கடுமையான துப்பாக்கி சண்டை; சர்வதேச பயங்கரவாதிகள் 2 பேர் கைது
டெல்லியில் போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்திய சர்வதேச பயங்கரவாதிகள் 2 பேர் கடுமையான சண்டைக்கு பின்னர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
வடமேற்கு டெல்லியில் சிறப்பு காவல் படையை சேர்ந்த போலீசார் மீது 2 பேர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அவர்களை பிடிக்க போலீசாரும் பதிலடி கொடுத்தனர். கடுமையாக நடந்த இந்த சண்டைக்கு பின்னர் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பாபர் கல்சா என்ற சர்வதேச பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர்கள் என தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து 6 பிஸ்டல்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் பூபேந்தர் என்ற திலாவர் சிங் மற்றும் குல்வந்த் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 2 பயங்கரவாதிகளையும் கைது செய்துள்ள டெல்லி சிறப்பு காவல் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
Related Tags :
Next Story