இந்திய பொருளாதார வீழ்ச்சி : "அரசாங்கமும் அதிகாரிகளும் பயம் கொள்ள வேண்டும்" - ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கருத்து
இந்திய பொருளாதார வீழ்ச்சி பற்றி அரசாங்கமும் அதிகாரிகளும் பயம் கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்திய பொருளாதார வீழ்ச்சி குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியதாவது:-
2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் நிகழ்ந்திருக்கும் 23.9% விகிதக் குறைவு, அனைவரையும் விழிப்படையச் செய்ய வேண்டும். மத்திய அரசு இந்த இணக்கமில்லா நிலையை ஒப்புக்கொள்வதுடன் அதை சரிசெய்ய முயல வேண்டும்.
கொரொனா பாதிப்பினால் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ள இரண்டு பெரிய வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இத்தாலியை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளது.
கொரோனா தொடர்பான நிவாரண செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர், விலையில்லா தானியங்கள் அளிப்பது முதல் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்துவது வரையிலான செயல்பாடுகள் மிகவும் அங்குமிங்குமானதாக பொதுவற்ற நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ள்ளார்.
மேலும் இதை சரி செய்ய, ஒரு பெரிய அளவிலான நேரடி செலவு திட்டத்தை அரசு உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story