கர்நாடகாவில் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடவிய ஐஸ் கிரீம் விற்பனை; கல்வி மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
கர்நாடகாவில் மேல்தட்டு மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு வெளியே போதை பொருள் தடவிய ஐஸ் கிரீம் விற்பனை நடைபெறுகிறது என மாநில கல்வி மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு,
கன்னட திரை உலகிலும், பெங்களூருவில் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், கர்நாடக முதன்மை மற்றும் மேனிலை கல்வி மந்திரி சுரேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, வசதி படைத்த மாணவர்கள் படிக்கும் சூழல்களுடன் நடத்தப்படும் பள்ளி கூடங்களுக்கு வெளியே போதை பொருள் கும்பலின் நெட்வொர்க் செயல்படுகிறது என்ற சந்தேகம் அரசுக்கு எழுந்துள்ளது.
அவர்கள் அதுபோன்ற பள்ளிகளுக்கு வெளியே, போதை பொருட்கள் தடவிய ஐஸ் கிரீம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து மாணவர்களை தங்களது வசம் இழுக்கின்றனர் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் தள்ளப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story