மம்தாவின் சூழ்ச்சி: மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை - ஜே.பி. நட்டா புகார்


மம்தாவின் சூழ்ச்சி: மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை - ஜே.பி. நட்டா புகார்
x
தினத்தந்தி 10 Sept 2020 5:21 PM IST (Updated: 10 Sept 2020 5:21 PM IST)
t-max-icont-min-icon

மம்தாவின் சூழ்ச்சியால் மேற்கு வங்கத்தில் மத்திய அரசின் திட்டம் ஏழைகளை சென்றடையவில்லை என்று ஜே.பி. நட்டா புகார் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

மேற்கு வங்க பாஜக நிர்வாகிகளுடன் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா காணொளியில் மூலம் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசியல் சூழ்ச்சியால் மத்திய அரசின் எந்த திட்டமும் ஏழைகளை சென்றடையவில்லை.

2019 ஆம் ஆண்டில் 40% வாக்குகள் கிடைத்ததாகவும் வரவிருக்கும் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை  தோற்க்கடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நாளை பீகார் மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Next Story