நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை - மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா


நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை - மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா
x
தினத்தந்தி 10 Sept 2020 6:20 PM IST (Updated: 10 Sept 2020 6:41 PM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வழக்கமாக ஜூலை இறுதியில் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு, நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், இந்த தொடர் தள்ளிப்போனது. எனினும் பட்ஜெட் தொடர் முடிந்து சுமார் 6 மாதங்கள் ஆகும் நிலையில் மழைக்கால தொடரை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி வருகிற 14-ந் தேதி முதல் இந்த தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பெருந்தொற்று சூழல் நிலவுவதால், அவை நடவடிக்கைகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருக்கிறது.

இந்நிலையில்,  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்துள்ளார்.

மேலும்  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மொபைல் செயலி வழியாக வருகைப் பதிவு செய்யப்படும். இரு அவைகளும் தொடர்ச்சியாக செயல்படும் என்றார்.

மேலும் அவர் கூறுகையில், நாங்கள் அனைத்து கட்சி தரப்பினருடன் விவாதித்தோம். கட்சியின் பலத்தின் அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் எங்கு அமர வேண்டும் என்பதை ஒவ்வொரு கட்சியின் தலைவரும் தீர்மானிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story