காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி துப்பாக்கி சூடு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இரவில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
காஷ்மீர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிரிஷ்ண காடி பிரிவில் இரவு 10 மணியளவில், பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இரவில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன ராணுவத்தினரால் தொடர்ந்து பதற்ற நீலை நீடித்து வரும் சூழலில் பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
Related Tags :
Next Story