சீனா ஆக்கிரமித்த நமது நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? ராகுல் காந்தி கேள்வி
சீனா ஆக்கிரமித்த நமது நிலத்தை மீட்க மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா பொது முடக்கம், பொருளாதார சூழல் உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், ராகுல் காந்தி இன்று வெளியிட்ட டுவிட் பதிவில், எல்லையில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “ சீன அரசு நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட நமது நிலத்தை திரும்பப் பெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது. அல்லது இதுவும் கடவுளின் செயல் என கைவிட முடிவு செய்யப்பட்டு விட்டதா? என வினவியுள்ளார்.
Related Tags :
Next Story