புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம்- பிரதமர் மோடி
பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
புதுடெல்லி,
புதிய கல்வி கொள்கை தொடர்பான மாநாட்டில், '21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி' எனும் தலைப்பில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மாற்றம் நிகழந்துள்ள நிலையில் நமது கல்வி முறை மாறவில்லை.
- புதிய கல்விக்கொள்கைக்காக 5 ஆண்டுகள் உழைத்தும் இன்னும் பணி முடியவில்லை.
- புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும்.
- புதிய கல்விக்கொள்கை செயல்படுத்த அனைவரும் ஒருங்கிணைய வேண்டும்.
- பழைய கல்வி கொள்கையை மாற்றுவது மிகவும் அவசியம்
- புதிய கல்விக் கொள்கையின் மூலம் புதிய யுகத்தை நிர்மாணிப்பதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளது
- 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை
- பழைய கல்வி கொள்கை மாற்றுவது மிகவும் அவசியமானதாக இருக்கிறது
- புதிய இந்தியாவின் தேவைக்கு ஏற்ப கல்விக்கொள்கையை அமைத்திருக்கிறோம்
- புதிய கல்விக்கொள்கைக்காக இரவு பகலாக உழைப்பு தரப்பட்டுள்ளது
- புதிய கல்விக்கொள்கை குறித்து பல கேள்விகள் எழும்
- வெற்றிகரமாக செயல்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி அவசியம்
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story